அரியலூர் -அப்துல்கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கோவிந்தபுத்தூர் கிராமத்தில் அக்னி சிறகுகள் இளைஞர்கள் அமைப்பின் சார்பாக நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மண்சட்டி மற்றும் மரக்கன்றுகள் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி வழங்கினார்.

அரியலூர் மாவட்டம் கோவிந்த புத்தூர் கிராமத்தில் மறைந்த அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அக்னி சிறகுகள் இளைஞர்கள் அமைப்பினர் கிராம பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் மண்சட்டி ,பானை, மூலிகை சூப் போன்றவற்றை வழங்கினர்.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவ படத்திற்கு ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பள்ளி மாணவர்கள் மறைந்த அப்துல் கலாமை பற்றி கவிதை மற்றும் பேச்சுப்போட்டியில் பங்கேற்றவர்களுக்கு மண்சட்டி,பானை மற்றும் மரக்கன்றுகள் , புத்தகங்கள் போன்றவை பரிசாக நகராட்சி ஆணையர் வழங்கினர்.

பின்னர் ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி பள்ளி மாணவர் மற்றும் பொதுமக்களுக்கு கூறுகையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்றும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் என்றும் கிராமப்புறங்களில் மரக் கன்றுகளை நடுவதன் மூலம் இயற்கையான சூழ்நிலையை உருவாக்க முடியும் என்றும் அக்னி சிறகுகள் இளைஞர்கள் இப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாகவும் வெகுவாக பாராட்டினார்.

 30 total views,  2 views today