அரியலூரில் அண்ணா சிலை அருகே சிஐடியூ நிர்வாகிகள்
தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய, மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியூ மாவட்ட செயலாளர் துரைசாமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சவுரிராஜன் ,விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியம், ஆகியோர் தலைமை வகித்தனர்.தொழிற்சங்க நிர்வாகிகள் சிற்றம்பலம் ,பிச்சை பிள்ளை, வரப்பிரசாதம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைகைவிடவேண்டும்நலவாரியங்களில்நிவாரணத்தொகை விடுபட்டவர்களுக்கு உடனே வழங்கிட வேண்டும், விவசாயிகள் ஏழை மக்களை பாதிக்கும் மின்சார சட்டத்தை கைவிட வேண்டும் ,நூறு நாள் வேலைத் திட்டத்தை இரு நூறு நாளாக ஆக உயர்த்தி கூலி ரூபாய் 500 உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்க நிர்வாகிகள்கண்டனகோஷங்களை எழுப்பினர். இவ்ஆர்பாட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள்புனிதன்,துரைஅருணன்,கிருஷ்ணன்,தனம்,முத்துச்செல்வி ,வெள்ளமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்

 122 total views