திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர்களே மருத்துவம் பார்ப்பது நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனைக்கு வந்துசெல்கின்றனர்.

நோயாளிகளின் எண்ணிக்கையை பொருத்து 3 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் துப்புரவுப் பணியாளர்கள் மருத்துவம் பார்க்கும் அவல நிலைக்கு இந்த மருத்துவமனை ஆளாகியுள்ளது.

 350 total views