பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் மூடப்பட்ட “அரசு மதுபானக்கடையை” இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டதால்! ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஜனநாயக மாதர் சங்கத்தில் மாவட்ட தலைவி”R.கலைச்செல்வி” மாவட்ட துனைத்தலைவரும்.பாபநாசம் ஒன்றிய செயலாளருமான “P.விஜயாள்” கலந்து கொண்டனர்.

இதில் பேசிய மாவட்ட தலைவி “R.கலைச்செல்வி” திறந்த மதுபான கடைகளை உடனே மூட வேண்டும் எனவும்,தமிழகம் முழுவதும் மூடிய மதுப்பான கடைகளை மீண்டும் திறக்க கூடாது எனவும் வழியுறுத்தினார்.

மேலும் மீடியா-7க்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் R.கலைச்செல்வி திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் மீது அத்துமீறி நடந்து கொண்ட அந்த குடிகார ADSP “பாண்டியராஜனை”உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் ஆர்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே அப்பகுதிக்கு வந்து பாபநாசம் வட்டாச்சியர் இனி இந்த புதிய பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் மதுபானக் கடை திறக்கபட மாட்டாது என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் பாபநாசம் தாசில்தார் பதவியேற்று ஒருவாரம் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 694 total views,  1 views today