அரசினர் துவக்க பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில பயிற்சி சிறப்பு வகுப்புகள்!

*அரசினர் துவக்க பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஆங்கில பயிற்சி சிறப்பு வகுப்புகள்*

குடியாத்தம் அடுத்த பத்தலபல்லி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று பிற்பகல் கடைசி பாட வேளையில் மாணவர்கள் ஆங்கிலம் பேச (SPOKEN ENGLISH) பயிற்சி வகுப்பு நடந்தது.
பயிற்சியினை பி.இ.சி.தனி பயிற்சி கல்வி நிறுவனம் முதல்வர் திரு. தங்க.முத்தரசன் அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கினார். மேலும் ஆங்கிலத்தில் சரளமாக படிக்க ஆக சிறந்த இரெழுத்து மற்றும் மூன்றெழுத்து சொற்களை தேர்வு செய்து வண்ண தாள்களில் அச்சிட்டு பிரிக்கமுடியாத பாலிதீன் உறைகளில் அனைத்து மாணவர்களுக்கு வழங்கினார். அவரின் சிறந்த கல்வி சேவையை பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்கள் பாராட்டினார்.

கிராமத்து அரசு பள்ளி மாணவர்கள் கல்வி கேள்விகளில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சரளமாக பேச வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேசும் திறனை பெற்றவர்களால் மட்டுமே முடியும் என்பதால் பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கி வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் கூறுகிறார்.
அரசு பள்ளிநினை தனியார் பள்ளிக்கு நிகராகவும் அரசு பள்ளிகளில்
“புதுமை பள்ளியாகவும்”,
“கனவு பள்ளியாகவும்”
தரம் உயர்தும் நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் அயராது உழைத்து வருகிறார்.
ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி மற்றும் மாணவர்கள் முன்னேற்றத்திற்கு தனியார் பள்ளிக்கு நிகராக சிறப்பாக பணியாற்றுவதாக உறுதி அளித்துள்ளனர்.
இவ்வளவு சிறப்பாக கொண்டுச் செல்லும் இப்பள்ளியில் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
3 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர் பணியாற்றும் பள்ளி உள்ள நிலையில் இப்பள்ளியில் எட்டு(1+7) ஆசிரியர்களுக்கு நான்கு ((1+3) ஆசிரியர்கள் +ஒரு மாற்று பணி ஆசிரியர் பணியாற்றுவது இயலாத நிலையில் உள்ளது. இந்த நிலையிலும் பள்ளியில் பல்வேறு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகின்றார். தலைமை ஆசிரியர் பொன். வள்ளுவன் அவர்களின் பள்ளி சேவையை நமது மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். எ.ராமன். இ.ஆ.ப.அவர்களும் கடந்த நவம்பர் 2017 பள்ளியில் நேரில் சென்று பாராட்டியது அனைத்து ஊடகங்களும் வெளியிட்டது குறிப்பிடதக்கது.

இவ்வளவு சிறப்பிற்குரிய பள்ளி நான்கு பணியிடங்கள் நிரப்பபடாமல் காலியாக உள்ளது. ஏன் இந்த பள்ளிக்கு 3 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர் பணியாற்றி வரும் பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியரை பத்தலபல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பும் வரை மாற்றுப் பணியில் அனுப்பக் கூடாது. பள்ளிக்கு தேவையான முழு ஆசிரியர்களும் இருந்தால் அடுத்த கல்வி ஆண்டில்
முதலாம் வகுப்பில் 50 மாணவர்களும்
மற்ற வகுப்புகளில் 50 மாணவர்களும் ஆக மொத்தம் 100 மாணவர்கள் சேர்பதாக உறுதி அளிக்கிறார். மாணவர்கள் இல்லாமல் ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து வரும் சூழ்நிலையில் இப்பள்ளியில் இவ்வாண்டு ஏற்பட்ட காலிப் பணியிடங்களை ஒராண்டு காலமாக நிரப்பபடாமல் உள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது என்கிறார் தலைமை ஆசிரியர் திரு பொன்.வள்ளுவன் அவர்கள். இது குறித்து அதிகாரிகள நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

குடியாத்தம்
கே.உமாசங்கர்

218 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close