அய்யாக்கண்ணு மீது திருச்சி எஸ்.பியிடம் மிரட்டல் புகார்.

திருச்சி ஜூன் 04

திருச்சி மாவட்டம் உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத் திருச்சி எஸ்பியிடம்
அய்யாக்கண்ணு மீது
புகார் மனு கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது சகோதரர் விச்சு என்ற லெனின் பிரசாத் சொந்தமாக டாரஸ் லாரி உள்ளது.
அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் லால்குடி பழனிசாமி மற்றும் அய்யம்பாளையம் சரவணன் ஆகிய
புரோக்கர்கள்
மூலம் முசிறியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் கோபிகண்ணணிடம் அழைத்துச் சென்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அவரிடம் லாரியின் ஆர்சி புத்தகம், செக் உள்ளிட்ட ஆவணங்கள் மற்றும் லாரியை ஒப்படைத்து 2வட்டிக்கு ரூ.1.70 லட்சம் பெற்றோம்.
இந்த வட்டியை தொடர்ந்து கொடுத்து வந்தோம்.
இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன் அசலை கொடுத்து லாரி மற்றும் ஆவணங்களை கேட்டோம். அதற்கு அசலாக 2 லட்சம்,
7 ரூ. வட்டி வீதம் தர சொன்னார்கள். இல்லாவிட்டால் வண்டியை உடைத்து விற்று விடுவதாக அய்யாக்கண்ணு மிரட்டினார். இது குறித்து கடந்த மாதம் 21 தேதி அன்று முசிறி இன்ஸ்பெக்டர் பால்ராஜிடம் புகார் அளித்தேன்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் முன்னிலையில் பேசி
3 ரூபாய் வட்டி கணக்கிட்டு தொகை முழுவதும் அளிக்கப்பட்டது. பின்னர் ஆவணங்களை கொடுத்த அய்யாகண்ணு தரப்பு லாரியை மறுநாள் தருவதாக கூறினர். மறுநாள் இன்ஸ்பெக்டர் மூலம் வண்டியை கேட்டபோது புரோக்கர் பழனிசாமி
ரூ.25 ஆயிரம் தர வேண்டும். அதை தந்தால்தான் வண்டியை தர முடியும் என்றனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் கேட்டதற்கு அய்யாகண்ணுவை பகைத்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். எனவே அய்யாகண்ணு, அவரது மகன் கோபிக்கண்ணு, இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து வண்டியை மீட்டு தர வேண்டும் .இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Trichy jk

161 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close