அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய மறுக்கும் அரசு ஊழியர்கள்…

அம்மா குடிநீர் வழங்கும் துறை இராமநாதபுரம் பேருந்து நிலையத்தை புறக்கணிக்கிறதா?
வெயிலின் தாக்கத்தால் வெளியூர் செல்லும் பயணிகள் தனியார் கம்பெனி குடிநீரை அதிக விலைக்கு வாங்கி பரிதவிப்பு…!
தமிழக அரசு தினசரி சென்னையிலிருந்து தமிழகம் முழுதும் உள்ள பேருந்து நிலையங்களுக்கு போக்குவரத்து துறையின் மூலமாக அம்மா குடிநீரை ரூ 10 மலிவு விலையில் வழங்கி வருகிறது.இராமநாதபுரநகராட்சி பேருந்து நிலையத்தில் தினசரி ரூ 10,000 முதல் 12,000 வரை குடிநீர் விற்பனையும் செய்யப்படுகிறது.இந்நிலையில் இன்று வரவேண்டிய குடிநீர் வராமல் நிறுத்தப்பட்டுள்ளது.இத்தகைய அலட்சிய போக்கு ககண்டிக்கத் தக்கது. சென்னையிலிருந்து வரும் அம்மா மினரல் குடிநீர் பாட்டில்கள் இராமநாதபுரத்திற்கு அனுப்புவதில் சென்னை நிர்வாகம் அலட்சியமாக செயல்படுவது பொதுமக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது.
இராமேஸ்வரத்தில் அம்மா குடிநீர் விற்பனை குறைவே என்றாலும் அதிக அளவில் அனுப்பி பற்றாக்குறை இல்லாமல் செயல்படும் நிர்வாகம் இராமநாநாதபுர நகர் பேருந்து நிலையத்தை மாற்றான் தாய் மனப்போக்கிலேயே நடத்துகிறது.
முறையான விநியோகம் தடையில்லாமல் தொடர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
வெறிச்சோடிகிடக்கும் அம்மா குடிநீர் விற்பனை மையம் செயல்படாமல் உறங்கி கிடக்கும் தமிழக அரசின் மனநிலையை பிரதிபலிக்கிறது.

மீடியா 7 செய்திக்காக

முகவை-அப்துல்லாஹ்

1,576 total views, 36 views today

Top

Registration

Forgotten Password?

Close