அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை துவக்கி வைத்தார் முதலமைச்சர்இளைஞர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில், “அம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தை” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.12,524 கிராம ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ’அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி விளையாட்டு போட்டி நடத்துதல், ஆடுகளம் அமைத்தல், உபகரணங்கள் கொள்முதல், உடற்பயிற்சி மையம் அமைத்தல் ஆகியவற்றுக்கு ரூபாய் 76 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.மேலும் உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் போட்டிகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

 269 total views,  2 views today