கோவை மாநகர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பாக அம்பேத்கர் இல்லத்தில் சேதப்படுத்தியது கண்டித்தும், மலக் குழிகளை தடை செய்து அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கு துரோகம் அளிக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று காலை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான்
தலைமையில் நடைபெற்றது

இதில் மாநில பொதுச்செயலாளர் ரவிக்குமார் மாவட்ட செயலாளர் ஜோதி முத்துக்குமார் மற்றும்

ஆதித்தமிழர் பேரவையின் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

 66 total views,  2 views today