அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டு முதல் 9 லட்சம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வெளிநாடு வாழ் மக்களின் எண்ணிக்கை அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 13 புள்ளி 7 சதவீதமாகும். கடந்த ஆண்டில் இது சற்றே அதிகரித்துள்ளதாக அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே நடத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் இந்தியர்களின் எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கும் குறைவுதான். ஆனால் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான கணக்கெடுப்பில் இந்தியர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே போல் அமெரிக்காவில் குடியேறும் சீனாவின் மக்கள் எண்ணிக்கையும் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

 229 total views