அமீரகத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக நடைப்பெற்ற கலந்தாலோசனை கூட்டம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை மாகாணத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் ஹோட்டல் கிராண்ட் சென்ரலில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு அமீரக தமிழ் நண்பர்கள் அமைப்பின் துணைதலைவர் திருச்சி முபாரக் தலையேற்று நடத்தினார். இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் கலந்துக்கொண்டனர். கலந்துகொண்டு பேசியவர்கள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் நிலவரங்கள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வினை அமீரக தமிழ் நண்பர்கள் அமைப்பின் பொதுசெயலாளர் முஹம்மது ஷியாத் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். இறுதியாக இந்த நிகழ்வின் நன்றியுரையை அமைப்பின் செயலாளர் இஷாக் வழங்கினார்.

துபாய் செய்தியாளர்
முகம்மது அஸ்கர் அலி

896 total views, 3 views today