அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்

June 4, 2017 0 By BAHRULLA SHA

திசைவழி பகுதி – 3

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் நிதியுதவித் திட்டம்
தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற பெண்களுக்கு பொருளாதார வகையில் திருமணத்திற்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கம். வழங்கப்படும் உதவி
திட்டம் 1 ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்படும்.
திட்டம் 2 ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் தமிழக அரசால் வழங்கப்படும்.

தகுதிகள்
திட்டம் 1- கல்வித்தகுதி தேவையில்லை.
திட்டம் 2- பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைநிலைக் கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
மணமகளுக்கு 18 வயது,மணமகனுக்கு 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
மணப்பெண்ணிடம் உதவித்தொகை காசோலையாக வழங்கப்படும்.
தேவையான சான்றுகள்
வருமான வரம்பு இல்லை.
சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து ஆதரவற்றோர் சான்று பெற்று வழங்கலாம் அல்லது தாய், தந்தை இறப்புச் சான்று வழங்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் வயதுச் சான்று.
பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு தேர்ச்சி சான்று

விண்ணப்ப படிவங்கள் விண்ணப்பிக்கும் அலுவலகங்களுக்கு அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும்.

யாரை அணுகுவது
மாநகராட்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் மாநகராட்சி ஆணையரையும், நகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையரையும், பேரூர்,கிராமப்புறங்களில் வசிப்போர் யூனியன் அலுவலகத்தையும் அணுகி விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு : ஆவணங்கள் அனைத்தும் அருகில் உள்ள அரசு (இ) பொது சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு: திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு : சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. http://www.chennaicorporation.gov.in

குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்  மாவட்டங்களில்   மாவட்ட ஆட்சியர் / மாவட்ட சமூகநல அலுவலர்  மாநில அளவில் –  சமூகநல இயக்குநர்,
சென்னை 600 005. 

ஏ.அக்பர் சுல்தான்,
அலுவலக செயலாளர்,
‘’விழி’’ – தமுமுக மனிதவள மேம்பாட்டு துறை,

326 total views, 2 views today