அதிமுக மெகா கூட்டணி இணைந்த புதிய தமிழகம் கட்சி

அதிமுக கூட்டணி இணைந்த புதிய தமிழகம் கட்சி

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளது. இதுதொடர்பாக இரு கட்சிகளும், சனிக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

அதிமுக மகா கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுபோன்று காலியாக உள்ள 21 இடங்களுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

வெற்றிக் கூட்டணியில் புதிய தமிழகம் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது. காலியாக உள்ள 21 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்போம்.

அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் உள்ள இந்த கூட்டணியில் புதிய தமிழகம் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறது. இம்முறையும் தனிச் சின்னம் பெற்று போட்டியிடுவோம். தொகுதி பின்னர் அறிவிக்கப்படும். 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாங்கள் வெற்றிபெறுவோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

1,301 total views, 3 views today