அரியலூர் அண்ணா சிலை அருகில் அரியலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் அதிகாரத்தில் தலையிட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், அனைவருக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் குடிமராமத்து பணி உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவரின் அனுமதி இல்லாமல் பணிகளை ஆளுங்கட்சியினருக்கு வழங்கி வருவதாகவும், ஊராட்சியில் 15 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு தலைமை கொறடா ராஜேந்திரனுக்கு உடந்தையாக மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிஒன்றிய மற்றும் உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) உள்ளிட்ட அதிகாரிகள்நடந்துகொள்வதாகவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்ஆர்ப்பாட்டத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் கு. சின்னப்பா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன்,நகரதிமுகசெயலாளர்முருகேசன்,மாவட்டதிமுகஇளைஞரணிஅமைப்பாளர் தெய்வ இளையராஜா ,வாரணவாசி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன்,இந்தியா தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் சந்திரசேகர், சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, ஒன்றிய செயலாளர் துரை அருணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜகுமாரி அறிவழகன், சென்னிவனம்சா.கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 248 total views