அதிகாரிகள் ஆள்மாறாட்டம் செய்து தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு : ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை

அதிகாரிகளை ஆள்மாறாட்டம் செய்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான விவகாரம் குறித்து, சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது :

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்களை திட்டமிட்டு அடையாளம் கண்டு குறிவைத்து போலீஸார் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தான் என்பது இதில் இருந்து தெளிவாக தெரிகிறது. அதை மறைப்பதற்காகவே கண் துடைப்புகாக விசாரணைக் கமின் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவிட்ட அதிகாரிகளைக் காப்பாற்றுவதற்காக ஆள்மாறட்டம் நடைபெற்று இருக்கிறது. எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் . எங்களிடம் இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு நாங்கள் நிச்சயம் நீதிமன்றத்தை நாடுவோம்.

இந்த கமினே போலி கமின். இந்த கமின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஏற்கனவே பேச அனுமதி கொடுத்துவிட்டு பேரவையில் பேச அனுமதிக்காமல் தடுத்து விட்டார்கள்.

 

மீடியா 7 செய்திகளுக்காக

சென்னை செய்தியாளர் அருண்

78 total views, 3 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close