Home Blog

விருத்தாசலத்தில் இலவச மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தனியார் பள்ளியில் ரோட்டரி சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் ரோடு சென்னை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ முகாம் கல்லீரல் எலும்பியல் காது-மூக்கு-தொண்டை ஆகிய மருத்துவ முகாமை சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழ்நாடு  காவல்துறை. ஐ ஜி. டி ஆர் .சந்தோஷ்குமார்  துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம் ரோட்டரி சங்கம் நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர்.

12 total views, no views today

கொலைக் குற்றவாளிக்கு தேனி நீதிமன்றம் ஒரு ஆயுள் தண்டனையும்  5000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மறவன்பட்டியில் கடந்த 2009 ஆம் ஆண்டு சீட்டு விளையாட்டின் போது ரஞ்சித் குமார் 20 வயது என்பவருக்கும் சிவ பாண்டி 26 வயது என்பவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ரஞ்சித் குமார்  என்பவரை சிவபாண்டி கத்தியால் சரமாரியாக குத்தியதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரஞ்சித் குமார்  பலியானார் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் இன்று இறுதி விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சிவ பாண்டிக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் அபராத தொகை கட்ட தவறினால் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் வழங்கினார் குற்றவாளி சிவ பாண்டியன் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்

15 total views, no views today

மத்திய மாநில அரசை கண்டித்து பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இடதுசாரிகள் கட்சிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பாக மத்திய மாநில அரசை கண்டித்து அமைதியான முறையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் அரசு உடைமைகள் அனைத்தும் தனியார் மயமாக்க படுவதையும் அனைத்து பொதுமக்களுக்கும் அரசால் கிடைக்கப்பெறும் நலத்திட்டங்கள் ஏழை மக்களுக்கு கிடைக்கப் பெறாமல் அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே சென்றடைகிறது. அனைத்து மக்களிடமும் வரி வசூலிக்கப்படுகிறது ஆனால் அதில் கிடைக்கும் பயன்கள் அதிகார வர்க்கத்திற்கு மட்டுமே சென்றடைகிறது . எனவே மத்திய அரசும் மாநில அரசும் அரசு உடைமைகள் அனைத்தும் தனியார் மாயமாக்கப்பாடமால் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அனைத்து பொது மக்களுக்கும் அரசால் கிடைக்கப்பெறும் நலத்திட்டங்களை மக்களுக்கு கிடைக்கப் பெறவும், மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

51 total views, 6 views today

பிரான்ஸ் நாட்டு கிறிஸ்துவ தம்பதிகளுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்த இந்து மக்கள் கட்சியினர்

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 காதலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லி காதலை பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்து மதத்தை பாதுகாக்கிறோம் இந்து மக்களை பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் காதலர்கள் ஒன்றுகூடி வாழ்த்துச் சொல்லும் பகுதிகளில் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைப்பது. சிலநேரங்களில் பூங்காக்களை சுற்றிப் பார்க்க வரும் அண்ணன், தங்கச்சி ஆகியோர்களை காதலர்கள் என்று நினைத்து திருமணம் செய்து வைக்க முயற்சிப்பது ஆகிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர்கள் தினத்தன்று தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரம் கோவிலை சுற்றி பார்க்கவந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் காதலர்கள் என்று நினைத்து அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தபோது அவருடைய குழந்தைகள் மம்மி டாடி என்று கூப்பிட்டுக் கொண்டு அவர் இருக்கும் பகுதிக்கு ஓடிவந்தனர் இதை கட்டு அதிர்ச்சி அடைந்த இந்து மக்கள் கட்சியினர் செய்வதறியாமல் திகைத்து நின்றனர் பின்னர் சுதாரித்துக் கொண்டு கோஷம் போடுவது போல் அங்கிருந்து ஓட்டம் எடுத்தனர்

228 total views, no views today

டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்

0

டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்*

டெல்லியில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில துணைநிலை ஆளுநர் அனில் பைஜலிடம் முறைப்படி கடிதம் வழங்கி உள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற எம்எல்ஏக்களின் பட்டியலை, டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜலிடம் முறைப்படி தேர்தல் ஆணையத்தின் சார்பாக டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜலிடம் முறைப்படி கடிதம் வழங்கினார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் டெல்லி மாநில முதல் அமைச்சராக மூன்றாவது முறையாக பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தேர்தல் படுதோல்வி எதிரொலியாக, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மாநில தலைவர் சுபாஷ் சோப்ரா மற்றும் மாநில பொறுப்பாளர் சாக்கோ ஆகியோரின் ராஜினாமாவை, அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, டெல்லி மாநில காங்கிரஸ் கட்சியின் தற்காலிக பொறுப்பாளராக சக்தி சின்ஹ் கோஹில் நியமிக்கப்பட்டுள்ளார்.

63 total views, 6 views today

நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்,
நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ,


நம் இந்திய தேசத்தின்
71 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு . கடந்த ( 21/01/2020) துவங்கி மூன்று நாட்களுக்கு மாணவர்களுக்கு திறன் சார் போட்டிகள் நடைபெற்றது ,
அதுசமயம் குடியரசு தினத்தன்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்  (11- 02 – 2020) பரிசளிப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.


கல்லூரியின் முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள் விழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினர் .
மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற கலை சார் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் செயலர் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பதக்கங்களையும், புத்தகங்களையும் வழங்கி சிறப்புரையாற்றினார் .

தமிழ்த்தாய் வாழ்த்தில் துவங்கிய நிகழ்வு தேசியகீதத்தோடு நிறைவடைந்தது

225 total views, 3 views today

துபாயில் குறையும் வேலைவாய்ப்பு – நாடு திரும்பும் வெளிநாட்டினர்

0

துபாயில் குறையும் வேலைவாய்ப்பு – நாடு திரும்பும் வெளிநாட்டினர்

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தந்த துபாயில் திடீரென வேலைவாய்ப்புகள் மாயமாக மறைந்து விட்டன.

மிகவும் வேகமாக பலர் வேலையை இழந்து சொந்த நாடுகளுக்குத் திரும்பக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. துபாயில் வர்த்தகம் பெருகிக் கொண்டிருந்த போதும் கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார நிலையால் துபாயின் எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத இதர தொழில்களில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் நிலைமை மிகவும் மோசம் அடைந்துள்ளது. மொத்த விற்பனை முதல் சில்லரை விற்பனை வரை , கட்டுமானத் தொழில் உள்ளிட்ட பல தொழில்கள் நலிவடைந்துள்ளன. இந்த நிலைமை உடனடியாக மாறக்கூடிய சூழல் தென்படவில்லை என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

375 total views, 3 views today

‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்

0

‘நீட்’ தேர்வு முறைகேடு வழக்கில், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 10 மாணவ-மாணவிகளின் புகைப்படத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வெளியிட்டுள்ளனர்* .

சென்னை :

‘நீட்’ தேர்வில் நடந்த முறைகேடு இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தேனி மருத்துவகல்லூரி மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதுதொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார், முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என மொத்தம் 14 பேரை கைது செய்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆள் மாறாட்டம் மூலம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது. இந்தநிலையில் சென்னை சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகம் சார்பாக நேற்றிரவு ஒரு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அந்த செய்திக்குறிப்புடன், ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக 2 மாணவிகள், 8 மாணவர்கள் புகைப்படங்களை வெளியிட்டனர். புகைப்படத்தில் உள்ளவர்களின் பெயர் விவரங்களோ, முகவரியோ தெரியவில்லை என்றும், அவர்களை பற்றி தகவல் தெரிந்தவர்கள் சி.பி.சி.ஐ.டி. சென்னை அலுவலகத்துக்கு 9443884395 என்ற செல்போன் எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

depccwcbcid@tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 total views, no views today

Registration

Forgotten Password?

Close